இந்தியா – ரஷ்யா இடையே எஸ்-400 ஒப்பந்தம் கையெழுத்தானது

--

டில்லி:

ஷ்யா மற்றும் இந்தியா இடையிலான அதிநவீன எதிர்ப்பு ஏவுகணையான எஸ்-400 விமானம் வாங்கும் ஒப்பந்தம்  கையெழுத்தானது.

இந்தியா – ரஷியா பங்கேற்கும் 19வது உச்சி மாநாடு டில்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் புதின் 2 நாட்களாக நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்தார்.  அவரை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விமான நிலையத்தில் கைகுலுக்கி வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து, இந்திய பிரதமர் மோடியும் விளாடிமிர் புதினும் டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில்  சந்தித்து பேசினார். அதையடுத்து நேற்று இரு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையை தொடர்ந்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அதில் குறிப்பாக, ரஷியாவின் அதிநவீன எதிர்ப்பு ஏவுகணையான எஸ்-400 விமானம் வாங்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, ரூ.36,000 கோடி மதிப்பிலான எஸ்-400 ஏவுகணைகள் வாங்கும் ஓப்பந்தம் இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

எஸ்-400 ஏவுகணைகள் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 300 இலக்குகளை அடையாளம் காணும், ஒரே நேராத்தில் 36 இடங்களில் தாக்குதல் நடத்தும் வலிமை கொண்டது. மேலும், விண்வெளியில் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரில் இந்திய கண்காணிப்பு மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும்,  மின்சார உற்பத்திக்காக மேலும் 6 அணு உலைகளை இந்தியாவில்  அமைக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்கனவே அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அமெரிக்க எதிர்ப்பை மீறி இந்தியா ரஷியாவுடன் எஸ் 400 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.