இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க அமெரிக்க அதிபருக்கு இந்தியா அழைப்பு
டில்லி :
அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 26ந்தேதி நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள இந்தியா வரும்படி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய குடியரசு தினம் ஜனவரி 26ந்தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் பல வெளிநாட்டு தலைவர்கள் குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அடுத்த (2019) ஆண்டு ஜனவரி 26ந்தேதி அன்று டில்லியில் நடைபெற உள்ள குடியரசு தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
ஏற்கனவே, முன்னாள் அதிபர் ஒபாமா கடந்த 2015ம் ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு அணிவகுப்பு நிகழ்ச்சியை கண்டுகளித்தார். இந்த நிலையில், அமெரிக்க தற்போதைய அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தியாவின் அழைப்பை அமெரிக்க அதிபர் ஏற்பார் என்று நம்பப்படுகிறது.
இந்த (2018) ஆண்டின் குடியரசு தினவிழாவின்போது, ஆசியான் நாடுகளின் பத்து தலைவர்களும் குடியரசு தின விழாவில் பங்கேற்ற சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.