பாலின பாகுபாடு ஒழிப்பில் இந்தியாவை விட 60 இடங்கள் முன்னேறிய வங்கதேசம்

டில்லி

லக பொருளாதார மையம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆண் பெண் பாலின பாகுபாடுகள் மிகவும் அதிக அளவில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

                                                           வங்க தேச பெண்கள்

உலகெங்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையில் பாலின பாகுபாடு இருப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.   ஆணுக்கு பெண் சமம் என கூறினாலும் பல நாடுகளில் ஆண்களை விட பெண்கள் தாழ்வாகவே கருதப்பட்டு வருகின்றனர்   இது குறித்து உலக பொருளாதார மையம் 149 நாடுகளில் பெண்களின் நிலை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த ஆய்வறிக்கையில் காணப்படுவதாவது :

கடந்த மூன்று வருடங்களில் உலகின் பல நாடுகளில் பாலின பாகுபாடுகள் குறைந்து வருகின்றன.   இது ஒரு நல்ல முன்னேற்றமாகும்.   ஆயினும் வளர்ந்து வரும் பல ஆசிய நாடுகளில் இன்னும் பாலின பாகுபாடுகள் அதிகம் காணப்படுகின்றன.    இதில் தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியா மிகவும் பின் தங்கி உள்ளது.

                 இந்தியப் பெண்கள்

கடந்த 2017 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 87 ஆம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது 108 ஆம் இடத்துக்கு வந்துள்ளது.   அண்டைநாடான வங்கதேசம் இந்தியாவை விட 60 மடங்கு மூன்னேறி 48 ஆம் இடத்தில் உள்ளது.   தெற்கு ஆசிய நாடுகளில் பாலின பாகுபாடு ஒழிப்பில் வங்கதேசம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இலங்கை 100 வது இடத்திலும் நேபாளம் 105 ஆவது இடத்திலும் இந்தியாவை விட முன்னேறிய இடத்தில் உள்ளது.    மாலத்தீவு 113 ஆம் இடத்தில் பூட்டான்  122 ஆம் இடத்திலும் உள்ளது.    இந்த நாடுகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் உள்ளது.   இந்த கணக்கெடுப்பில் ஆப்கானிஸ்தான் பங்கு கொள்ளாததால் கடைசி இடமான 148 ஆம் இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.

இந்த தர வரிசையில் தொடர்ந்து 10 ஆவதுமுறையாக ஐஸ்லாந்து முதல் இடத்தில் உள்ளது.   நார்வே இரண்டாம் இடத்திலும் ஸ்வீடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.