சிட்னி: தனது முதல் இன்னிங்ஸில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 96 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

தற்போதைய நிலையில், ஆஸ்திரேலியாவை விட 242 ரன்கள் பின்தங்கியுள்ளது.

ரோகித் ஷர்மா மற்றும் ஷப்மன் கில் ஆட்டமிழந்த நிலையில், சத்தீஷ்வர் புஜாராவும், கேப்டன் ரஹானேவும் களமிறங்கினர். அவர்கள், தங்களின் விக்கெட்டை இன்றைக்குள் இழந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனமாக இருந்தனர்.

மொத்தம் 53 பந்துகளை சந்தித்த புஜாரா, 9 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதேபோன்று 40 பந்துகளை சந்தித்த ரஹானே 5 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

இன்றைய இரண்டாம் நாள் நிலவரப்படி, மொத்தம் 45 ஓவர்கள் பேட்டிங் செய்த இந்திய அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை சேர்த்து, ஆஸ்திரேலியாவை விட 242 ரன்கள் பின்தங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட்டுக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.