டில்லி:

உலகளவில் தற்கொலை செய்துகொள்வோரில் இந்தியர்கள்தான் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 3 கோடி பேர் மனநலக் கோளாறு நோயில் சிக்கியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ” உலகம் முழுவதும் சுமார் 32 கோடிக்கும் அதிகமானோர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, சீனா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த எண்ணிக்கை  அதிகம் உள்ளது.  15 முதல் 29 வயதுடைய இளம் பருவத்தினரே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

மன அழுத்த நோயால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.  கடந்த 2015-ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 7,88,000 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” . என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.