Random image

2014ல் இருந்து தவறான திசையில் செல்லும் இந்தியா : அமர்த்தியா சென்

டில்லி

டந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா தவறான திசையில் செல்வதாக நோபல் பரிசு பெற்றவரும் சிறந்த பொருளாதார நிபுணருமான அமர்த்தியா சென் குற்றம் சாட்டி உள்ளார்.

பிரபல பொருளாதார நிபுணரான அமர்த்தியா சென் நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.   இவரது பொருளாதாரம் குறித்த கருத்துக்கள் உலகெங்கும் உன்னிப்பாக நோக்கப்படுகிறது.    இவர் சமீபத்தில் மற்றொரு பொருளாதார நிபுணர் ஜீன் டிரேஸ் உடன் இணைந்து ’இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்’ என்னும் ஆங்கில புத்தகத்தை எழுதி உள்ளார்.  அதன் இந்தி மொழியாக்கம் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த புத்தக வெளியிட்டு விழாவில் அமர்த்தியா சென் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.   அப்போது அவர், “கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து இந்தியப் பொருளாதாரம் தவறான பாதைக்கு மாறி விட்டது.   சரியாக சொல்லப் போனால்   தவறான திசையில் சென்றுக் கொண்டுள்ளது.   நான் பொருளாதார அடிப்படையில் பின்னால் சென்றுக் கொண்டு இருக்கிறோம்.

தற்போது இந்தியா உலகின் பொருளாதாரத்தில் மோசமான நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது.   கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய நாடுகளில் ஸ்ரீலங்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் இருந்தது.   ஆனால் தற்போது நேர்மாறாக பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் பாகிஸ்தான் முதல் இடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. ” எனக் கூறி உள்ளார்.