புதுடெல்லி:

ஆடையக ஏற்றுமதியில் இந்தியா பின் தங்கியதால், பங்களாதேஷை நோக்கி வெளிநாடுகள் படையெடுக்கத் தொடங்கிவிட்டன.

மேற்கத்திய ஆடையக ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தை வகித்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக 17 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதியை தக்க வைத்திருந்தது.

தற்போது டிமான்ட் அதிகமாகியுள்ளது. எனினும் இந்தியாவின் ஏற்றுமதி அளவு உயரவில்லை.
இதனால், ஆடை இறக்குமதியாளர்கள் பங்களாதேஷை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

சர்வதேச அளவில் பங்களாதேஷில் உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதால், சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ய வழிவகுத்துள்ளது.

ஆடையக ஏற்றுமதியில் இந்தியாவுக்கு சிறிதளவு சரிவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், பங்களாதேஷின் ஆடையக ஏற்றுமதி இரு மடங்காக உயர்ந்துள்ளது.