இந்தியா அதிக சகிப்புத் தன்மை உள்ள நாடு : ராஜ்நாத் சிங்

டில்லி

ந்தியா மிகவும் சகிப்புத்தன்மை உள்ள நாடு என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரபல மூத்த நடிகர் நசிருதீன் ஷா செய்தியாளர்களிடம், “புலந்த்ஷகரில் பசுக்களின் கொலையால் இரண்டு மனிதர்கள் உயிரிழந்துள்ளனர்.   காவல்துறையினருக்கு மனிதர்களின் சாவை விட பசுக்களின் சாவே பெரிதாக தெரிகிறது.  நாங்கள் எங்கள் குழந்தைகளை எந்த மதத்தையும் சாராதவர்களாக வளர்த்துள்ளோம்.    அவர்களைப் போன்றவர்கள் இந்த நாட்டில் வாழ தற்போது சகிப்பு தன்மை குறைந்து விட்டது” என பேசி இருந்தார்.

அதற்கு ஆளும் பாஜகவினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.   இந்நிலையில் லக்னோவில் உள்ள ஜார்ஜ் அரசர் மருத்துவ பல்கலைக்கழக 114 ஆம் வருட அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.   அதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துக் கொண்டார்.   அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ராஜ்நாத் சிங், “உலகின் எந்த மூலையிலும் இல்லாத அளவுக்கு சகிப்புத் தன்மை இந்தியாவில் உள்ளது.    பல இன மற்றும் பல்வேறு மதத்தை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.   அனைவரும் இணைந்து நாட்டை முன்னேற்ற பங்களித்து வருகின்றனர்.   அது என்றும் தொடரும்” என அறிவித்தார்.

ராஜ்நாத் சிங் இந்த கருத்தை யாருக்கு சொல்கிறோம் என வெளிப்படையாக கூறா விட்டாலும் இது நடிகர் நசிருதீன் ஷாவுக்கு அளித்த பதில் என்பதை செய்தியாளர்கள் புரிந்துக் கொண்டுள்ளனர்.

You may have missed