புதுடெல்லி: உலகளவில் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் பொருளாதாரங்களுள் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று என்று விமர்சித்துள்ளார் நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி.

இந்திய அரசால், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் தூண்டல்கள் போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “கெரோனா முடக்கத்திற்கு முன்பாகவே இந்தியப் பொருளாதாரம் சுனங்கத் தொடங்கிவிட்டது. உலகளவில், மோசமாக நிர்வகிக்கப்படும் பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று. தற்போதைய நிலையைவிட, 2021ம் ஆண்டில் பொருளாதாரம் சற்று மேம்பட்டிருக்கும்.

இந்தியப் பொருளாதாரத்திற்கான தூண்டல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது இன்னும் கூடுதலாக இருந்திருக்க வேண்டுமென நான் கருதுகிறேன்” என்றுள்ளார் அவர்.