டெல்லி:
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் சர்வதேச எல்லைகளுக்கு சீல் வைக்கப்போவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் தெகன்பூர் எல்லை பாதுகாப்பு படை உதவி கமாண்டன்ட்கள் பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில்,‘‘ பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளின் சர்வதேச எல்லை பகுதிகளுக்கு விரைவில் சீல் வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. பயங்கரவாதத்திறகு எதிரான மிகப் பெரிய நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படவுள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘தொடரும் ஊடுறுவல் முயற்சி காரணமாக பாகிஸ்தான் எல்லையை 2018ம் ஆண்டில் சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அளவில் உள்துறை செயலாளர் மூலம் கண்காணிக்கப்படும்.

மாநில அளவில் தலைமைச் செயலாளர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பார்கள். கடினமான நிலப்பரப்புகளில் சீல் வைக்க தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காணப்படும். சர்வதேச எல்லைகளுக்கு நிர்ணயிக்கட்ட விதிகளை எல்லை பாதுகாப்பு படை மாற்றியுள்ளது. இது நமது அண்டை நாடுகளுக்கும் பொருந்தவுள்ளது. ராணுவத்தில் குறைதீர் மையங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும்’’ என்றார் ராஜ்நாத் சிங்.