Random image

“விவசாயிகளுக்கு மானியம்” : இந்தியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

ரிசி மற்றும் கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இந்திய அரசு மிக அதிக மானியம் அளிப்பதாக  அமெரிக்கா குற்றம் சாட்டியிருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விசாரணை ஒன்றின் போது அந்நாட்டின் விவசாய வர்த்தகத்துறை பிரதிநிதி ஜார்ஜி டவுட்  தெரிவித்ததாவது:

“இந்தியாவின் விளைபொருள் மானியக் கொள்கை குறித்து அரிசி மற்றும் கோதுமையை அதிகளவில் விளைவிக்கும் நாடுகள் கவலைகொள்ள வேண்டியிருக்கிறது.

கடந்த ஐந்து வருடங்களில் வேறு எந்த நாடுகளையும் விட இந்தியாதான் அதிகளவில் அரிசி, கோதுமை உற்பத்தி செய்துள்ளது. அந்நாடு தனது விவசாயிகளுக்கு மிக அதிக மானியம் அளக்கிறது. இந்தியாவின் விளைபொருள் மானியக் கொள்கையால் சர்வதேச வர்த்தகச் சமநிலை பாதிக்கப்படும்” என்றார்.

.விவசாய விளைபொருட்களுக்கு இந்தியா அதிக மானியம் வழங்குவது குறித்து   உலக வர்த்தக நிறுவனமும் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது.

அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும் அதிக மானியம் காரணமாக அவற்றை உலக சந்தைகளுக்கு குறைந்த விலையில் இந்தியா ஏற்றுமதி செய்ய முடிகிறது. இது பிற அரிசி, கோதுமை ஏற்றுமதி நாடுகளை பாதிப்பதாக புகார் தெரிவித்திருந்தது.