சீனாவுக்கு முதல் முறையாக ஏற்றுமதி ஆகும் பாஸ்மதி அல்லாத அரிசி 

நாக்பூர்

ன்று முதன் முறையாக இந்தியாவில் இருந்து சீனாவுக்கு பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்யபடுகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்ய சின அரசு அனுமதி அளித்தது.   பாஸ்மதி அரிசிக்கான தேவை மிகவும் குறைவாகவே உள்ளதால் இந்தியா எதிர்பார்த்த அளவுக்கு  ஏற்றுமதி நடக்கவில்லை.    அதை ஒட்டி இரு அரசு அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அந்த பேச்சு வார்த்தையின் விளைவாக கடந்த முறை பிரதமர் மோடியின் சீனப் பயணத்தின் போது இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று உருவானது.   அந்த ஒப்பந்தத்தின் மூலம் சீனாவின் உணவு மற்றும் சுகாதாரக் கொள்கைகளுக்கு உட்பட்ட வகையில் பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை இறக்குமதி செய்ய சீனா ஒப்புக் கொண்டது.

சீன அரசின் உணவுப் பொருள் கழகமான கோஃப்கோ இந்திய அரிசி வகைகளை சோதனை செய்தது.  அந்த கழகம் ஒப்புதல் அளித்த அரிசி வகையில் 100 டன்கள் இன்று நாக்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.   இது இந்தியாவில் இருந்து அனுப்படும் பாஸ்மதி அல்லாத அரிசி வகையின் முதல் ஏற்றுமதி ஆகும்.