இயங்காத இலங்கை விமானநிலையத்துக்கு கோடிக்கணக்கில் செலவிடும் இந்தியா

டில்லி

யங்காத இலங்கை மத்தாலா ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்துக்கு கோடிக்கணக்கில் இந்தியா செலவு செய்கிறது.

இலங்கையில் உள்ள மத்தாலா ராஜபக்சே சர்வதேச விமான நிலையம் இயக்கத்தில் இல்லை.   அதனால் உலகின் ஆளரவம்ற்ற விமான நிலையம் என அழைக்கப்படுகிற்து.  இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 250 கிமீ தூரத்தில் இந்த விமான நிலையம் உள்ளது.   முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சொந்த ஊரில் அவர் பெயரில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தை பொருள் நஷ்டத்தால் இலங்கை இயக்குவது இல்லை.

இங்கிருந்த எந்த விமானமும் செல்லாததால் இந்த விமான நிலையத்தை குத்தகைக்கு விட இலங்கை அரௌ கடந்த 2017 ஆம் வருடம் அழைப்பு விடுத்தது.    தற்போது இந்த விமானநிலையத்தை குத்தைகைக்கு எடுத்துள்ள இந்திய அரசு இதற்காக வருடத்துக்கு $30 கோடி செலவிடுகிறது.  இந்த விமானநிலையம் ஒரு வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது.

இங்கு சர்வதேச பறவைகளும் விலங்குகளும் அதிகம் வசிக்கின்றன.  இந்த விமானநிலையம் தொடங்கிய 2013 ஆம் ஆண்டு பல பறவைகள் விமானத்தில் மோதியதால் விமான சேவை தடை பட்டுள்ளது.   அத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த விமான நிலையத்தில் சில காட்டெருமைகளும் யானைகளும் புகுந்து விரட்டி அடிக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு இடைஞ்சல்களுக்கிடையே இந்த விமான நிலையத்தை இந்தியா குத்தகை எடுத்ததற்கான ஒரே காரணம் சீன ஆக்கிரமிப்பு மட்டுமே ஆகும்.    சீனா ஏற்கனவே இலங்கை தீவில் தனது ராணுவ முகாம் அமைக்கப் பாடுபட்டு வருகிறது.   அத்துடன் இப்பகுதியில் உள்ள துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது.   அதனால் பாதுகாப்பு கருதி இயங்காத இந்த இலங்கை விமான நிலையத்துக்கு இந்தியா கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறது.