கடமைக்காக களத்தில் நிற்கிறார்களா? – விக்கெட்டுகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆடும் இந்தியா!

சிட்னி: வெற்றிபெற வேண்டுமெனில், பெரிய அதிரடியைக் காட்ட வேண்டுமென்ற சூழலில், இந்திய அணியோ, பந்துக்கேற்ற ரன்கள் என்பதாக ஆடி வருகிறது.

கடந்தப் போட்டியைப் போல், இன்றும் சேஸிங்கில் சொதப்பி வருகிறது இந்திய அணி.

பெரிய இன்னிங்ஸ்களை ஆடியிருக்க வேண்டிய துவக்க வீரர்களான மாயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான், முறையே 28 மற்றும் 30 ரன்களை மட்டுமே அடித்தனர். ஷ்ரேயாஸ் 36 பந்துகளில் 38 ரன்களை மட்டுமே அடித்தார்.

எப்படியாவது சதமடித்துவிட வேண்டுமென்று ஆசைப்பட்டு ஆடிவந்த கோலி, 87 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 37 பந்துகளில் 36 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆட்டமிழந்த முதல் 4 பேட்ஸ்மென்களில், ஒருவர் மட்டுமே அரைசதம் அடித்துள்ளார். அதுவும் மெதுவான அரைசதம். தற்போதைய நிலையில், இந்திய அணியின் வசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில், 91 பந்துகளில் 165 ரன்களை எடுக்க வேண்டுமென்ற நிலை. வெல்லுமா இந்திய அணி?