நியூசிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் – தடுமாறும் இந்திய அணி!

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி மோசமான நிலையில் தடுமாறி வருகிறது. 2ம் நாள் முடிவில் இந்திய அணி 51 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்கம் எதிர்பார்த்தபடி அமையவில்லை. பிரித்வி ஷா 16 ரன்களும், மாயங்க் அகர்வால் 34 ரன்களும் அடித்தனர்.

கேப்டன் கோலி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில, இப்போட்டியின் இக்கட்டான நிலையில், 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். புஜாரா 11 ரன்கள் மட்டுமே எடுக்க, ரகானே 46 ரன்களையும் எடுத்தனர்.

மொத்தத்தில், 165 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது இந்திய அணி.

நியூலாந்தின் டிம் செளதி மற்றும் ஜேமிஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், டாம் பிளன்டல் 30 ரன்களும், கேன் வில்லியம்சன் 89 ரன்களும், ராஸ் டெய்லர் 44 ரன்களும் அடிக்க, அந்த அணி இரண்டாம் நாளில் முடிவில 5 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை எடுத்துள்ளது. இந்தியாவின் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.