டெஸ்ட் சாம்பியன்ஷிப் – புள்ளிப் பட்டியலில் வலுவான முன்னிலை வகிக்கும் இந்தியா..!

துபாய்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்து வென்றதையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், தனக்கான புள்ளிகளை நன்றாக ஏற்றிக்கொண்ட இந்திய அணி, தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

ஒவ்வொரு போட்டிக்கு 40 புள்ளிகள் என்ற விகிதத்தில், மொத்தம் 120 புள்ளிகளை இந்தத் தொடரின் மூலம் வென்றுள்ளது இந்தியா.

ஒரு டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் மட்டுமே இருந்தால், ஒரு போட்டியின் வெற்றிக்கு 60 புள்ளிகள் வழங்கப்படும். அதுவே, 3 போட்டிகள் என்றால் ஒரு வெற்றிக்கு 40 புள்ளிகளும், 5 போட்டிகள் என்றால், ஒரு வெற்றிக்கு 24 புள்ளிகளும் வழங்கப்படும்.

மேற்கிந்தியத் தீவுகளில் டெஸ்ட் வெற்றியைப் பெற்றதன் மூலம் 120 புள்ளிகளும், தற்போதைய வெற்றியின் மூலம் 120 புள்ளிகளும் கிடைத்ததால், இந்திய அணி மொத்தமாக 240 புள்ளிகளைப் ப‍ெற்றுள்ளது.

இந்திய அணி அடுத்ததாக, வங்கதேசத்துடன் நவம்பரம் மாதம் டெஸட் தொடரில விளையாடவுள்ளதால், அதன் புள்ளிகள் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‍உலகளவில் டெஸ்ட் புள்ளிகளில் முதல் 2 இடங்களைப் ப‍ெறும் அணிகள், வரும் 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் இறுதி டெஸ்ட்டில் மோத வைக்கப்பட்டு, வெற்றிபெறும் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.

கார்ட்டூன் கேலரி