இந்தியா – ஜப்பான் பிரதமர்கள் பேச்சுவார்த்தை : ஆறு முக்கிய ஒப்பந்கள் கையெழுத்து

ந்தியா – ஜப்பான் இடையே ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள தொழில் முனைவோர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவில் தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். இதேபோல் ஜப்பான் வாழ் இந்தியர்களையும் சந்தித்தார். அப்போது சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

பிறகு டோக்யோவில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை சந்தித்தார்.  அப்போது ராணுவம், பொருளாதார துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விரிவாக பேசப்பட்டது. இதையடுத்து இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில், பாதுகாப்புத்துறை, ரயில்வே, தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் ஆறு முக்கிய ஒப்பந்தங்கள்  கையெழுத்தானது. பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இருநாடுகள் உறவின்மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும்,  உலக அமைதிக்காக இந்தியா, ஜப்பான் இணைந்து பாடுபடும் என்றும் கூறினார்.  பின்னர், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்பட்டார்.