மீண்டும் எடியூரப்பா: கர்நாடக பா.ஜ.க.வின் யுகாதிப் பரிசு !

மீண்டும் எடியூரப்பா:

Yeddyurappa_0_0
எடியூரப்பா மீதான எல்லா வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில், யுகாதிப் பரிசாய் மீண்டும் நான்காவது முறையாக, கர்நாடகத்தின் பா.ஜ.க. மாநிலத் தலைவராய் நியமிக்கப் பட்டுள்ளார்.
தற்போதையத் தலைவர் பிரகலாத் ஜோஷியின் பதவிகாலம் அக்டோபரில் முடிந்திருந்தாலும் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக அவர் அப்பதவியில் நீட்டிக்கப் பட்டிருந்தார். ஜனவரியில், உயர்ஜாதியினரிடையே மட்டுமின்றி மாநிலம் முழுவதும் செல்வாக்குப் பெற்ற எடியூரப்பா மீதான எல்லா வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவரை மீண்டும் நான்காவது தலைவராக்குவதில் பா.ஜ.க. மேலிடத்திற்கு எந்தத் தயக்கமும் இல்லை.

yeddyur featured
ஜெயலலிதாவைப் போன்றே உயர்ஜாதியில் பிறந்தவர், ஜெயலலிதாவைப் போன்றே மக்கள் செல்வாக்கு பெற்ற இவர், ஜெயலலிதாவைப் போன்றே  ( 2011-ல்,  சுரங்க) ஊழல் குற்றச்சாட்டில்  பரப்பன அக்ரஹார சிறையில்  3 வாரம் வாடி (!), ஜெயலலிதாவைப் போன்றே கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நீதியை நிலைநாட்டி(!) விடுதலை செய்யப் பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.