டில்லி

கொரோனா சிகிச்சைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ள ஹைட்ராக்சிகுளோரோகுவின் மருந்துக்கு ஏற்றுமதி தடையை இந்தியா விலக்கி உள்ள்து.

மலேரியா சிகிச்சைக்கு பயன்படும் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுவின் மருந்தை கொரோனாவுக்கு மருத்துவர் ஆலோசனையின் அடிப்படையில் பயன்படுதலாம் என மருத்துவ நிபுணர்கள் அறிவித்தனர்.  இந்த மருந்துக்கு அமெரிக்க அதிபர் டிர்மப் பெரிதும் ஆதரவு அளித்துள்ளார்.   இதனால் பல நாடுகளிலும் இந்த மருந்துக்கு கிராக்கி அதிகரித்தது.

கடந்த வாரம் இந்த மருந்தை சோதித்த பிரிட்டன் விஞ்ஞானிகள் இது தோல்வி அடைந்துள்ளதாக அறிவித்தனர்.  அத்துடன் ஒரு மருத்துவ இதழில் இந்த மருந்தை அளிப்பது நிறுத்தப்பட்ட ஒரு வாரத்தில் இறப்பு விகிதம் அதிகரித்ததாக செய்திகள் வெளியாகின்.    ஆயினும் உலக சுகாதார மையம் இந்த மருந்தை மீட்னும் சோதிக்க உள்ள்தாக அறிவித்துள்ளது.

எனினும் இந்தியாவில் இந்த மருந்து அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது.  இந்த மருந்து இந்தியாவில் அதிக அள்வில் தயாரிக்கப்படுகிறது.   இந்தியாவில் கொரோனா  பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த மருந்துக்கு அதிகம் தேவை உள்ளது.  இதையொட்டி இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய அரசு தடை விதித்தது.

இந்நிலையில் டிர்மப் வற்புறுத்தல் காரணமாக இந்த ஏற்றுமதி தடைக்கு இடைக்கால விலக்கு விதிக்கபட்டு சுமார் 5 கோடி மாத்திரைஅக்ளை இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.   மருந்து உற்பத்தி அதிகமாகி உள்ள்தால் தற்போது மத்திய அரசு மருந்துகள் துறை அமைச்சகம் இந்த மருந்து ஏற்றுமதி தடையை முழுவதுமாக நீக்கி உள்ளது.

மொத்த உற்பத்தியில் 20% மாத்திரைகளை உள்நாட்டு தேவைக்கு வைத்துக் கொண்டு  மீதமுள்ளவை மட்டும் ஏற்றுமதி செய்யபட உள்ளன.