இந்தியாவில் சராசரியாக 96% மழை பெய்யும்: இந்திய வானிலை ஆராய்ச்சி துறை

புதுடெல்லி:

இந்த ஆண்டு ஜுன் முதல் செப்டம்பர் வரை நீண்ட கால சராசரியாக 96% மழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.


இது குறித்து மத்திய புவி அறிவியல் துறை அமைச்சக செயலர் எம்.ராஜீவன் கூறும்போது, பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக, இந்த ஆண்டு 96% மழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 4 மாதங்கள் பெய்யும் மழை கிட்டத்தட்ட சராசரியாக இருக்கும்.  கடந்த 1951-2000 வரையிலான 50 ஆண்டுகளில் சராசரி மழை அளவு 89 செ.மீட்டராக உள்ளது.

இதைவிட கூடுதல் மழை பெய்வதற்கோ அல்லது சராசரியை விட அதிகம் மழை பெய்வதற்கோ வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்றார்.