உலகக் கால்பந்து தரவரிசை – இந்தியாவுக்கு 109வது இடம்!

பாரிஸ்: உலகளவில் கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஃபிஃபா வெளியிட்ட நிலையில், அதில் இந்தியாவிற்கு 109வது இடம் கிடைத்துள்ளது.

இந்திய அணிக்கு 1187 புள்ளிகள் கிடைத்துள்ளன. அதேசமயம், இப்பட்டியலில் பெல்ஜியம் 1773 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

1744 புள்ளிகள் பெற்ற பிரான்ஸ் இரண்டாமிடத்திலும், 1712 புள்ளிகள் பெற்ற பிரேசில் மூன்றாமிடத்திலும், 1664 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து நான்காமிடத்திலும் நீடிக்கின்றன.

அதேசமயம், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வென்ற போர்ச்சுகல் அணி, 1653 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உருகுவே, ஸ்பெயின், குரேஷியா, அர்ஜெண்டினா மற்றும் கொலம்பிய அணிகள் அடுத்த 5 இடங்களில் உள்ளன.