வெளிநாட்டவருக்கு இந்தியா ஒரு பலாத்கார நாடாக தெரிகிறது : மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை

வெளிநாட்டவர்களுக்கு இந்தியா பலாத்காரம் மற்றும் குற்றங்கள் நிறைந்த நாடாக தோற்றம் அளிப்பதாக மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த பகுத்தறிவாளரான நரேந்திர தபோல்கர் கடந்த 2013 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி புனே நகரில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பாடார்.  அதன் பிற்கு இரு வருடங்கள் கழித்து மற்றொரு பகுத்தறிவாளரான  கோவிந்த் பன்சாரே கோலாப்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கு டில்லி நீதிமன்றத்தின் நீதிபதிகள்  தர்மாதிகாரி மற்றும் பாரதி டாங்ரே ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.   நேற்று இந்த அமர்வு இந்த வழக்கு விசாரணையை நடத்தியது.   அப்போது இரு வழக்குகளையும் நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுப் பிரிவு  தாங்கள் விசாரணையின் முடிவுக்கு வந்து விட்டதாகவும்,  இனி விசாரணை நடத்தி குற்றவாளிகலை கண்டுபிடிக்க வழியில்லை எனவும் தெரிவித்தது.

இதற்கு அமர்வு, “மதச் சார்பற்றோருக்கு இந்த நாட்டில் பாதுகாப்பில்லை.    மேலும் நாட்டில் நீதித்துறை உட்பட அனைத்துத் துறைகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.   அதை வெளியில் உள்ளோர் செய்வதில்லை.   நாம் அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்கிறோம்.  குற்றவாளிகளை கண்டுபிடித்து நாம் அவர்களை விட புத்திசாலிகள் என நிரூபிக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை 40 வருடம் கழித்து கண்டுபிடிக்கப்பட்டது.   அதற்குள் குற்றவாளி வயதாகி தனது முழு வாழ்க்கையையும் முடிக்கும் நிலைக்கு வந்து விட்டார்.   அந்த நிலை ஒவ்வொரு வழக்கிலும் எற்படக் கூடாது.   வெளிநாட்டவர் பார்வையில் இந்தியா என்பது பலாத்காரம் மற்றும் குற்றங்கள் நிறைந்த நாடாக தென்படுகிறது”  எனக் கூறி உள்ளது.