சடசடவென சரிந்த இந்திய விக்கெட்டுகள் – 130 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்!

அகமதாபாத்: இங்கிலாந்து அணியைவிட, முதல் இன்னிங்ஸில், இந்தியா நல்ல முன்னிலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியோ, இன்று ஆட்டம் தொடங்கியதிலிருந்து விக்கெட்டுகளை மளமளவென இழந்துவிட்டது.

அகமதாபாத்தில், இந்தியா – இங்கிலாந்து இடையே 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ‍நேற்று முதல்நாள் ஆட்டநேர முடிவின்படி இந்திய அணி 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஆனால், இன்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திற்குள் 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்துவிட்டது. அரைசதம் அடித்திருந்த ரோகித் ஷர்மா 66 ரன்களில் வெளியேறினார். ரஹானே 7 ரன்களுக்கு காலியானார்.

பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பன்ட் 1 ரன்னில் வெளியேற, வாஷிங்டன் சுந்தரோ டக்அவுட் ஆனார். அக்ஸாரும் டக்அவுட்.

இதனால், இந்திய அணி 130 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கிறது. அஸ்வின் மட்டும் முடிந்தவரை போராடி வருகிறார். ஆனால், அவருக்கு துணை நிற்பதற்குத்தான் யாருமில்லை என்ற நிலை.

இங்கிலாந்து சார்பில், கேப்டன் ஜோ ரூட், திடீரென 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து அள்ளினார். ஜேக் லீச்சிற்கு 4 விக்கெட்டுகள் கிடைத்தன.