ஆசிய கபடி போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

ஜகர்தா:

ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இன்று ஆண்களுக்கான கபடி அரையிறுதி போட்டிகள் நடந்தது.

முதல் அரையிறுதி போட்டியில் கொரியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் கொரியா 27-24 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா-ஈரான் அணிகள் மோதின.

இந்திய ஆண்கள் கபடி அணி ஆசிய போட்டியில் தங்கத்தை இழந்தது கிடையாது. ஈரானை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறும் என்ற எதிர்பார்பபு நிலவியது. ஆனால் 18-27 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. அரையிறுதியில் தோற்றதால் வெண்கல பதக்கத்துடன் இந்தியா நாடு திரும்புகிறது.