ரன்னுக்கு முன்னரே விக்கெட் – இந்தியா நிதான ஆட்டம்!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இநதிய அணி, ரன் கணக்கைத் துவக்குவதற்குள், ஷப்மன் கில்லின் விக்கெட்டை பறிகொடுத்தது.

தற்போது, இன்றைய ஆட்டநேர முடிவிற்குள், மேலும் விக்கெட்டுகள் விழாமல் இருக்க, மிகவும் நிதானமாக ஆடிவருகிறது இந்திய அணி.

தனது முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா தனது ஆட்டத்தை துவக்கியது. வந்த வேகத்தில், ஷப்மன் கில் ஆண்டர்சன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அவர், இன்று துவக்க வீரராக களமிறங்கினார்.

பின்னர், ரோகித்துடன், புஜாரா இணைந்தார். இவர்கள் இருவரும், விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் மிகவும் நிதானமாக ஆடிவருகின்றனர். ரோகித் ஷர்மா 5 ரன்களையும், புஜாரா 4 ரன்களையும் எடுத்துள்ளனர்.