மும்பை: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் போட்டியில் இந்திய அணி முதலில் களமிறங்கி 20 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. அதற்கேற்ப களமிறங்கினர் இந்தியாவின் துவக்க ஜோடிகள் ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான்.

ஆனால், ரோகித் ஷர்மா 10 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், கேப்டன் கோலிக்கு பதில் மூன்றாவது வீரராக ராகுல் களமிறங்கியுள்ளார். ஷிகர் தவான் மிகவும் நிதானமாக ஆடிவருகிறார்.

விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் இடம்பெற்றுள்ளார். பும்ரா, ஷமி மற்றும் தூகுர் போன்ற வேகங்களுடன், ஜடேஜா(ஆல்ரவுண்டர்) மற்றும் குல்தீப் யாதவ் போன்றோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் பிட்ச் இப்போதைய நிலையில் சேஸிங் செய்வதற்கு ஏற்றது என்று கூறப்படும் நிலையில், போட்டியை வெல்ல வேண்டுமெனில், இந்தியா பெரிதாக ஸ்கோர் செய்து, பந்துவீச்சில் மிரட்ட வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.