சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில், மொத்தம் 3 விக்கெட்டுகளை ரன்அவுட் முறையில் இழந்துள்ளது இந்திய அணி. ஒரு டெஸ்ட் போட்டியில் 3 ரன்அவுட்டுகள் என்பது ஏற்கவே முடியாத மோசமான விஷயம்.

இந்தமுறையாவது ஒரு நல்ல இன்னிங்ஸை ஆட வேண்டிய எதிர்பார்ப்பில் இருந்த அனுமன் விஹாரி, 4 ரன்கள் எடுத்திருந்தபோது ஹேசில்வுட்டினால் ரன்அவுட் செய்யப்பட்டார்.

பேட்டிங்கிலும் பல சமயங்களில் நல்ல பங்களிப்பை வழங்கக்கூடிய அஸ்வின், 10 ரன்கள் எடுத்திருந்தபோது பேட் கம்மின்ஸால் ரன்அவுட் செய்யப்பட்டார்.

இந்த 2 ரன்அவுட்டுகள் போதாதென்று, பும்ராவும் லபுஷேனால் ரன்அவுட் செய்யப்பட்டார். இந்த ரன்அவுட்டுகள் தவிர்க்கப்பட்டிருந்தால், இந்தியாவின் கணக்கில் இன்னும் 50 ரன்கள் வரை ஏறியிருக்கலாம்.

இத்தனை ரன்அவுட்டுகள் ஆகும் அளவிற்கு இந்திய அணி கவனச் சிதறலோடு, தனது முதல் இன்னிங்ஸில் ஆடியிருக்கிறது.