குறைந்த ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா – விராத் கோலி டக்அவுட்!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்துள்ளது.

‍நேற்று, ஷப்மன் கில் அவுட்டான நிலையில், ரோகித்தும் புஜாராவும் களத்தில் இருந்தனர். இன்று, புஜாரா நிலைத்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 17 ரன்களுக்கே அவுட்டானார். அதற்கடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி, பென் ஸ்டோக்ஸ் பந்தில் டக்அவுட் ஆனார்.

தற்போது, ரோகித்துடன், துணைக்கேப்டன் ரஹானே இணைந்து பொறுமையாக ஆடிவருகின்றனர். இதுவரை, 40 பந்துகளை சந்தித்துள்ள ரஹானே, 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களை எடுத்துள்ளார்.

மொத்தம் 106 பந்துகளை சந்தித்த ரோகித் ஷர்மா, 32 ரன்களை எடுத்துள்ளார். இந்திய அணி தற்போதைய நிலையில் 3 விக்கெட்டுகளுக்கு 80 ரன்களை சேர்த்து, இங்கிலாந்தைவிட 125 ரன்கள் பின்தங்கியுள்ளது.