Random image

கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோல்வி….தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

லண்டன்:

கடைசி டெஸ்ட் போட்டியிடும் இந்தியா தோல்வி அடைந்தது. இதன் மூலம் 4:1 என்ற கணக்கில இங்கிலாந்து தொடரை வென்றது.

இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. நேற்றைய 4து நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. இந்திய அணியில் தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது.

5-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், ரஹானே 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விஹாரி 0 ரன்களில் அவுட் ஆனார். ராகுல் – பந்த் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ராகுல் தனது சதத்தை பதிவு செய்தார். ரஷித் பந்தில் ராகுல் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்த பந்த் 114 ரன்களில் அவுட் ஆனார். ஜடேஜா, இஷாந்த், சமி ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆயனர். இதனால் 345 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணி 4-:1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.