உணவு இடைவேளைக்குள் 4வது விக்கெட்டை இழந்த இந்தியா – முன்னிலை பெறுமா?

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. இதனால், இங்கிலாந்தின் 205 ரன்களைத் தாண்டுமா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.

ஷப்மன் கில், புஜாரா, கோலி ஆகியோர் விரைவிலேயே ஆட்டமிழந்துவிட்ட நிலையில், ரோகித்துடன், ரஹானே நிலைத்துநின்று, பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 27 ரன்கள் எடுத்திருந்தபோதே, ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்துவிட்டார். இதனால், இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது, 32 ரன்களுடன் ரோகித் களத்தில் இருக்கிறார். அவருடன், அடுத்து ரிஷப் பன்ட் களமிறங்க உள்ளார். இவர்கள் இருவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே, இங்கிலாந்தைவிட முதல் இன்னிங்ஸில் முன்னிலைப்பெற முடியும்.