சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா. ஏற்கனவே 2 போட்டிகளை வென்றிருந்த நிலையில், டி-20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா.

ஆஸ்திரேலியா நிர்ணயித்த 187 ரன்கள் இலக்கை விரட்ட களமிறங்கிய இந்திய அணியில், இம்முறை, துவக்க வீரர் ராகுல் டக்அவுட் ஆனார். ஷிகர் தவான் 28 ரன்களில் அவுட்டாக, கேப்டன் கோலி நிலைத்து நின்றார்.

அவர் 61 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருக்கு வலுவான துணை யாருமே அமையவில்லை. ஷ்ரேயாஸ் டக் அவுட் ஆனார். அவர் இத்தொடர் முழுவதும் சிறப்பாக ஆடவில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா 13 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அவுட்டானதும், இந்தியாவின் வெற்றி நம்பிக்கை தகர்ந்தது. கடைசிக் கட்டத்தில், ஷர்துல் தாக்குர் 7 பந்துகளில் 17 ரன்களை அடித்தும் வேலைக்கு ஆகவில்லை.

இறுதியாக, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களே எடுத்து, 12 ரன்களில் வீழ்ந்தது இந்திய அணி. அதேசமயம், டி-20 கோப்பையை வென்றது.