புதுடெல்லி: ஈரானிடமிருந்து இறக்குமதி நிறுத்தத்தால் ஏற்படும் எண்ணெயின் இழப்பை ஈடுசெய்யும் வகையில், இதர முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிலிருந்து கூடுதல் எண்ணெய், எரிவாயுவை பெறும் வகையில் திட்டமிட்டிருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 1ம் தேதிக்குப் பிறகு, ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின்மேல், பொருளாதார தடைகள் விதிக்கப்படுமென அமெரிக்கா எச்சரித்ததை அடுத்து, இந்தியா மாற்று ஏற்பாடுகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

ஏனெனில், ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில், சீனாவிற்கடுத்து முக்கிய இடம் வகிக்கிறது இந்தியா.

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், நாட்டின் பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்களின் தேவைகளை சமாளிக்கும் வகையில் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி