புதிய கட்சியை தொடங்கினார் ரஜினி கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி… ரஜினி வாழ்த்து…

சென்னை: ரஜினி கட்சியின்  முன்னாள் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி,  “இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி”  என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். அவருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த ரஜினிக்கு ஆதரவாக பாஜகவின் அறிவுசார் பிரிவு  தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி அங்கிருந்து விலகி ரஜினி கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்து ரஜினி அழகு பார்த்தார். பின்னர் உடல்நலப் பாதிப்பு காரணமாக, கட்சி அறிவிப்பை வாபஸ் பெறுவதாக  ரஜினி அறிவித்ததால், அவரை நம்பிச்சென்றவர்களின் நிலை பரிதாபமாக இருந்தது.

அதைத்தொடர்ந்து டிவிட் பதிவிட்ட அர்ஜுன மூர்த்தி, ரஜினி  கட்சித்தொடங்கவில்லை என்ற அவரது முடிவுக்கு முழு ஆதரவை தெரிவிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது,  “இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி”  என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.

அர்ஜுன மூர்த்தியின் கட்சிக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.