டில்லி

தொடர்ந்து பயங்கர வாதத்தை ஆதரித்தால் இந்தியாவில் இருந்து செல்லும் நதிகல் தடுத்து நிறுத்தப்படும் என பாகிஸ்தானுக்கு அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார்.

கடந்த 1960 ஆம் ஆண்டு மறைந்த இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் அப்போதைய பாகிஸ்தான் குடியரசு தலைவர் அயூப் கான் ஆகியோர் சிந்து நதி ஒப்பந்தத்தை உருவாக்கினர்.   சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகள் நீர் பங்கீடு குறித்த அந்த ஒப்பந்தம் இன்று வரை இரு நாடுகளும் பின்பற்றி வருகின்றன.

அந்த ஒப்பந்தப்படி பஞ்சாபின் கிழக்கு பகுதி நதிகளான ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நதிகளின் முழு உரிமையையும் இந்தியா பெற்றுக் கொண்டது.   அத்துடன் மேற்குபகுதியில் உள்ள சிந்து, ஜீனப், ஜைலம் ஆகிய நதிகள் பாகிஸ்தானுக்கு தடை இன்றி வழஙக வேண்டும் எனவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நிலவிய நல்லுறவு காரணமாக வே சிந்து நதி ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட்து.   புல்வாமா தாக்குதலுக்கு பிறகு தனது தீவிரவாத ஆதரவு மூலம் பாகிஸ்தான் தொடர்ந்து அந்த நல்லுறவை மீறி வருகிறது.

அந்நாடு தீவிரவாத ஆதரவை மேலும் தொடர்ந்தால் அந்நாட்டுக்கு இந்தியாவில் இருந்து செல்லும் 3 நதிகளும் தடுத்து நிறுத்தப்படும்.    ஏற்கனவே நம் நாட்டு மக்களில் பலர்பாகிஸ்தானுக்கு இந்திய நதி நீர் செல்லக் கூடாது என வற்புறுத்தி வருகின்றனர்.   பாகிஸ்தான் தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா பின்பற்றாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.