டுஷான்பே: 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றில், இந்தியக் கால்பந்து அணி ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெறுகிறது. இதன்பொருட்டு, பங்குபெறக்கூடிய ஆசிய அணிகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.

இந்திய அணி இடம்பெற்றுள்ள பிரிவில் கத்தார், ஓமன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே இதுவரை 3 போட்டிகள் ஆடியுள்ள இந்திய அணி, 1 தோல்வி மற்றும் 2 டிரா பெற்றுள்ளது. டுஷான்பே மைதானம் ஆப்கனுக்கு சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்திய அணி தரவரிசையில் ஆப்கானிஸ்தானைவிட முன்னணியிலும், இதுவரை சந்தித்துள்ளப் போட்டிகளில் அதிக வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் இருப்பது நம்பிக்கை அளிக்கும் விஷயமாக உள்ளது. இப்போட்டியில் வென்றால் அது இந்திய அணியின் தகுதி கனவுக்கு சாதகமாக அமையும்.