டில்லி:

சீனாவின் அணு ஆயுத நிலையை கருத்தில் கொண்டு தான் இந்தியா தனது அணு ஆயுதங்களை நவீன மயமாக்கி வருகிறது என்று அமெரிக்கா அணு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

காலகாலமாக பாகிஸ்தான் மீதிருந்த இந்தியாவின் பார்வை தற்போது கம்யூனிஸ ஜாம்பவானான சீனாவை நோக்கி திரும்பியுள்ளது. தென்னிந்தியாவில் இருந்து சீனாவை இலக்காக கொண்டு ஏவுகணைகளை நவீனப்படுத்தி வருவதாக ‘‘ஆப்டர் மிட்நைட்’’ என்ற மின்னணு இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

150 முதல் 200 ஆயுதங்களுக்கு தேவையான 600 கிலோ ப்ளூடோனியம் தயார் செய்ய இந்தியா திட்டமிட்டது. ஆனால், 120 முதல் 130 ஆயுதங்களுக்கு தேவையான ப்ளூடோனியத்தை தயார் செய்துள்ளது என்று அந்த இதழில் அமெரிக்க அணு வல்லுனர்கள் கிரிஸ்டென்சன், ராபர்ட் நோரிஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பாரம்பரியமாக பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுதத்தை குவித்து வந்த இந்தியா தற்போது சீனாவை குறித்து வைத்து அணு ஆயுதங்களை தயார்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் சீனாவுடனான உறவை அதிகப்படுத்தும் வகையில் இந்தியா திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். டெல்லி தற்போது 7 அணு ஆயுத திட்டங்களை இயக்கி வருகிறது.

2 விமானம்,4 நிலத்தடியில் இருந்து தாக்கும் ஏவுகணை, ஒரு கடல் சார்ந்த ஏவுகணை வைத்துள்ளது. மேலும் 4 திட்டங்களை மேம்படுத்தி வருகிறது. இது நிலத்தில் இருந்து நீண்ட தூர இலக்கும், கடல் சார்ந்த மேம்பாடாகவும் இருக்கிறது என்று அவர்கள் எழுதியுள்ளனர்.

திட எரிபொருள், ரெயிலில் கொண்டு செல்லும் வகையில் அக்னி 2ன் மேம்படுத்ப்பட்ட அக்னி 1 ஐ இரண்டு நிலைகளாக இந்தியா மேற்கொண்டு வருகிறது. 2 ஆயிரம் கி.மீ., பயணம் செய்து சீனாவின் மேற்கு, மத்திய, தெற்கு பகுதிகளை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அக்னி 4 இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் இருந்து சீனாவின் பெய்ஜிங், சங்காய் ஆகிய நகரங்கள் இலக்காக கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொலை தூர த தாக்குதல் இலக்குக்கு அக்னி ௫, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ௫ ஆயிரம் கி.மீ இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தூர இலக்குடன் அக்னி 5 மத்திய மற்றும் தென்னிந்தியாவில் சீனாவை இலக்காக கொண்டு நிலை நிறுத்தப்படுகிறது என்றும் அவர்கள் இந்த கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.