india monsoon predictor
வருடாந்திர இந்திய பருவமழையின் தொடக்கமும் முடிவும் முந்தைய காலத்தை விட இப்போது கணிசமாக கணிப்பது சாத்தியம். இந்த புது கணிப்பு முறையைக் கண்டுபிடித்ததற்கு விஞ்ஞானிகளுக்குத் தான் நன்றி தெரிவிக்க வேண்டும் ஏனெனில் துணைக்கண்டத்தின் உணவு மற்றும் நீர்-மின்சக்தி விநியோகத்தை அதிகரிக்க இது உதவும்.
இந்த செயல்முறை, பிராந்திய வானிலைத் தரவின் ஒரு நெட்வர்க் பகுப்பாய்வை அடிப்படையாக கொண்டது, மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்திய வானிலை ஆய்வு துறைக்கு இந்த அணுகுமுறையை முன்மொழிவர்.
துணைக்கண்டத்தின் மக்கள்தொகைக்கு உணவளிக்கும் ஆயிரக் கணக்கான விவசாயிகளுக்கு இந்த பலத்த கோடை மழை இன்றியமையாததாகும். எதிர்கால காலநிலை மாற்றம், பருவமழை ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வாய்ப்புள்ளது, இதனால் துல்லியமான முன்னறிவிப்பு இன்னும் பொருத்தமாக உள்ளது.
“இரு வாரங்களுக்கு முன்னர் நாம் இந்திய பருவமழைத் தொடக்கத்தை கணிக்க முடியும், மற்றும் அதன் முடிவை ஆறு வாரங்களுக்கு முன்பு கணிக்க முடியும் – இது ஒரு பெரிய திருப்புமுனை ஆகும் ஏனெனில்  விவசாயிகளுக்கு ஒவ்வொரு நாளும் இன்றியமையாதது,” என்று இந்த ஆய்வின் முக்கிய-ஆசிரியரான ஜெர்மனியிலுள்ள காலநிலைத் தாக்கத்தின் ஆராய்ச்சிக்கான போட்ஸ்டாம் நிறுவனத்தைச் (PIK) சார்ந்த வெரோனிகா ஸ்டோல்போவா கூறினார்.
“வட பாகிஸ்தான் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு நெருக்கமான ஒரு மலைத்தொடரான கிழக்கு தொடர்ச்சி மலையில் வெப்பநிலை மற்றும் ஈரப்பத மாற்றங்கள் தான் பருவமழைக்கான முக்கியமான மாற்றத்தை  குறிக்கிறது என்று நாங்கள் கண்டறிந்தோம்,” என்று ஸ்டோல்போவா கூறினார். வழக்கமாக, இந்தியாவின் தெற்கு முனையில் உள்ள கேரளா மீது தான் அதிகக் கவனம் இருந்து வருகிறது.
மழைவரும் நேரம் நெல் பயிரிடுவதற்கு மட்டுமல்லாமல் நீர்-மின்சக்தி  உருவாக்குவதற்கும் மிக முக்கியம், என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.  பருவமழை வரும் நேரம் பற்றிய தகவல்கள் இந்திய விவசாயிகளுக்கு மிக முக்கியம் அப்போது அவர்களால் விதைத்ததை அறுவடை செய்யும் நேரத்தை தீர்மானிக்க முடியும். அரிசி, சோயா மற்றும் பருத்தி போன்ற பயிர்கள் பொதுவாக ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான  பருவமழை மழைக்காலத்தில் வளர்க்கப்படுகின்றன.
பருவமழை சற்று நேரம் தவறி வந்தால் கூட வறட்சி அல்லது வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புகள் வரலாம். மேலும் பருவமழையின் காலம் நீர்-மின் சக்தியை உருவாக்குவதை திட்டமிடுவதற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும் ஏனெனில் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை நிரப்ப மழை அவசியம்.
விஞ்ஞானிகள் வரலாற்று பருவமழையின் தரவுகளோடு தங்கள் முறையை சோதனை செய்தனர். கருதப்பட்ட ஆண்டுகளுக்கு, இது 70 சதவீதத்திற்கும் மேலாக தொடக்கத்திற்கு சரியான கணிப்புகளையும் 80 சதவீதத்த்ற்கும் மேல் முடிவிற்கு சரியான கணிப்புகளைக்  கொடுக்கிறது.
முன்மொழியப்பட்ட அணுகுமுறையின் முக்கிய ஆதாயம் என்னவென்றால், தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் முறைகளுடன் ஒப்பிடும்போது, கணிப்பை நேரத்தின் அண்மையை மேம்படுத்த அனுமதிக்கிறது என்று, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜியோபிசிகல் ரிசர்ச் கடிதங்கள் என்ற இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது.