மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து, இந்திய அணியைவிட 2 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது.

நாளை காலை புதிய பந்தில் ஆஸ்திரேலியாவின் எஞ்சிய விக்கெட்டுகள் விரைவில் வீழ்த்தப்படும் பட்சத்தில், இந்திய அணியின் வெற்றி 100% உறுதி செய்யப்படும்.

ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரர் மேத்யூ வேட் மட்டுமே 40 ரன்களை அடித்தார். மார்னஸ் லபுஷேன் 28 ரன்கள் அடித்தார். ஸ்மித் 8 ரன்களில் நடையைக் கட்டினார்.

தற்போது, கேமரான் கிரீன் 17 ரன்களுடனும், பேட் கம்மின்ஸ் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

டெஸ்ட் தொடர் முழுவதுமே இந்திய பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மென்களைவிட சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இன்றையப் போட்டியில் ஜடேஜா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மற்றபடி, பும்ரா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.