Random image

உ.பி.யில் பரவி வரும் மர்ம காய்ச்சல்: இதுவரை 42 பேர் பலி!

லக்னோ:

த்தரப்பிரதேச மாநிலத்தில்  பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக  இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

வடமாநிலங்களில் கடந்த மாதம் பல இடங்களில் கனமழை பொழிந்தது. உ.பி. மாநிலத்திலும் சில பகுதிகளில் கனமழை மற்றும் நிலச்சரி ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், மழை காரணமாக ஏற்பட்ட சுகாதார சீர்கேடு காரணமாக உ.பி. மாநிலத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

இந்த காய்ச்சலானது   மாநிலத்தில் ஷாஜஹான்பூர், பாரியெல்லி, பதான்பூர் உள்பட  சில மாவட்டங்களில் பரவி வருகிறது.  இந்த காய்ச்சல் குறித்து மத்திய மாநில சுகாதாரத்துறை யினர்  ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுவரை மர்ம காய்ச்சல் காரணமாக  42 பேர் பலியாகி இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 6 பேர் இறந்துள்ளதாகவும் கூறி உள்ளது.

இதுகுறித்து கூறிய மாநிக சுகாதாரத்துறை மந்திரி சித்தார்த்நாத் சிங், மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் 3 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் காய்ச்சல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.  மேலும், பாதிக்கப்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உடனடியாக காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.