உலகக்கோப்பையை ஏந்த இந்தியாவுக்கு தேவை 185 ரன்கள்..!

மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணிக்கு 185 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீராங்கனைகள் அலிஸா ஹீலி 39 பந்துகளில் 75 ரன்களையும்(5 சிக்ஸர்கள் & 7 பவுண்டரிகள்), பெத் மூனி 54 பந்துகளில் 78 ரன்களையும்(10 பவுண்டரிகள்) அடித்து அந்த அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துவிட்டார்கள்.

மெக் லேன்னிங் 16 ரன்களை அடித்தார். இறுதியில், 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 184 ரன்களை குவித்தது.

இந்தியா தரப்பில் தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷிகா பாண்டே 4 ஓவர்கள் வீசி, 52 ரன்களை வாரி வழங்கினார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.