மழை காரணமாக கைவிடப்பட்ட இந்திய – நியூசிலாந்து ஆட்டம்

லண்டன்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழை காரணமாக ரத்துசெய்யப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

இந்தியா தனது மூன்றாவது ஆட்டத்திலும், நியூசிலாந்து தனது நான்காவது ஆட்டத்திலும் ஆடவிருந்தன. ஏற்கனவே 3 ஆட்டங்களை ஆடியிருந்த நியூசிலாந்து, அனைத்திலும் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் இருந்தது.

2 ஆட்டங்கள் மட்டுமே ஆடியிருந்த இந்திய அணி, இரண்டிலும் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் இருந்தது. தற்போது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டிருப்பதால், இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நியூசிலாந்து அணி மொத்தமாக 7 புள்ளிகளும், இந்திய அணி 5 புள்ளிகளும் பெறுகின்றன. புள்ளிப்பட்டியலில், தற்போது வரை நியூசிலாந்து அணியே முதலிடம் வகிக்கிறது.

ஒரு பரபரப்பான கிரிக்கெட் போட்டியை காண காத்திருந்த ரசிகர்களின் ஆசையில், மழை மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது.

Leave a Reply

Your email address will not be published.