வங்க தேசத்துக்கு இந்தியா வழங்கிய 10 டீசல் ரயில் எஞ்சின்கள்

--

டில்லி

ந்தியா 10 டீசல் ரயில் எஞ்சின்களை வங்க தேசத்துக்கு வழங்கி உள்ளது.

வங்க தேசத்துக்கு ரூ.18000 கோடி கடன் உதவித் திட்டத்தின் கீழ் 17 ரயில் திட்டத்துக்கு உதவ இந்தியா முன் வந்தது.

இந்த திட்டத்தில், ரயில் பாலங்கள், சிக்னல்கள், அகல ரயில்பாதை அமைத்தல், டீசல் எஞ்சின் வழங்கல் என பல திட்டங்கள் உள்ளன.

இவற்றில் ஒரு கட்டமாக இந்தியா 10 டீசல் ரயில் எஞ்சின்களை இந்தியா வழங்கியது.

இதற்காக நடந்த காணொளி நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ரயில் வே அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துக் கொண்டனர்.

இவர்களுடன் வங்க தேச ரயில்வே அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரும் கல்ந்துக் கொண்டனர்.

இந்த 10 டீசல் ரயில் எஞ்சின்களும் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் கெடே ரயில் நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன.