இந்தியன் ஓபன் பேட்மின்டன்: சிந்துவுக்கு வெள்ளி பதக்கம்

டில்லி,
ந்தியன் ஓபன் பேட்மின்டன் தொடரின்  இறுதிச்சுற்றில், அமெரிக்க வீராங்கனை பெய்வன் சாங்கை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தோல்வி அடைந்தார். இதன் காரணமாக அவர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் டில்லியில் நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில்,  36-ம் நிலை வீராங்கனை பெட்ரிஸ் கார்லெஸை  ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

சுமார்  54 நிமிடங்கள்  ஸ்பெயினை சேர்ந்த பீட்ரிஸ் கார்லெஸ்சுடன்  நடைபெற்ற  பரபரப்பான  ஆட்டத்தில், பி.வி.சிந்து 21-12, 19-21, 21-11 என்ற செட் கணக்கில் பீட்ரிசை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

பின்னர்  அரை இறுதியில் உலகத் தர வரிசையில் மூன்றாம் நிலையில் உள்ள தாய் வீராங்கனை ரட்சனோக் இன்டனோனை நேர் செட்களில் தோற்டிகத்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் காரணமாக அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அமெரிங்க வீராங்கனையான  சாங்குக்கு கடும் போட்டியாக விளங்கிய சிந்து, அவருக்கு ஈடுகொடுத்து விளையாடினார்.

இருந்தாலும், அவரால் வெற்றி பெற முடியவில்லை. 21-18,11-21,21-22 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். இதன் காரணமாக அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்து.