பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில் 336 ரன்களை சேர்த்துள்ளது இந்திய அணி. இதன்மூலம், முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவைவிட 33 ரன்கள் பின்தங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்களை அடித்த நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. மூன்றாம் நாளில் 186 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், வாஷிங்டன் சுந்தரும், ஷர்துல் தாகுரும் இணைந்து இந்திய அணியை மீட்டனர்.

இவர்கள் இருவருமே அரைசதம் அடித்ததோடு, இந்தியளவில் சாதனை பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதேசமயம், நிலைத்து நின்று ஆடி, ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை தொடுவார்கள் என்ற நிலையில், 60 ரன்களைக் கடந்த நிலையில் இருவருமே அவுட்டானார்கள்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட்டுக்கு 5 விக்கெட்டுகள் கிடைத்தன. கம்மின்ஸ் & ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகள் எடுக்க, லயனுக்கு 1 விக்கெட் மட்டுமே கிடைத்தது.

தற்போது, ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியுள்ளது.