சிந்து நதி உடன்படிக்கை – இந்தியா, பாக்கிஸ்தான் முக்கிய ஆலோசனை

சிந்து நதி உடன்படிக்கையை முறையாக அமல்படுத்துவது தொடர்பாக இந்தியாவும், பாக்கிஸ்தானும் ஆலோசனை நடத்தின. பாக்கிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதை அடுத்து, நீண்ட ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்படாத சிந்து நதியின் உடபடிக்கை குறித்து தற்போது ஆலோசனை நடத்தப்பட்டது.

a

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1960-ம் ஆண்டு சிந்து நதி உடன்படிக்கை கையெழுத்தானது. இதன்படி ரவி, பீஸ், சட்லஜ் ஆகிய சிந்து படுகையின் கிழக்குப் பகுதி நதிகள் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டன. மேற்குப் பகுதி நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றில் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த உடன்படிக்கையின்படி இருநாட்டு அதிகாரிகளும் ஆண்டு தோறும் சந்தித்துப் பேச வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தது. ஆனால் இருநாடுகளுக்கும் அடிக்கடி இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக பல ஆண்டுகளாக உடன்படிக்கை மீதான பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுள்ளதை அடுத்து, இந்த ஆண்டு சிந்து நதி உடன்படிக்கைக்கான பேச்சு வார்த்தை நடந்தது. இது பாக்கிஸ்தானின் லாகூர் நகரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய குழுவிற்கு பிரதீப்குமார் சக்சேனாவும் பாகிஸ்தான் குழுவிற்கு சையது முகமது மெஹர் அலி ஷாவும் தலைமை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் காஷ்மீரின் செனாப் நதியில் 1,000 மெகாவாட், 48 மெகாவாட் நீர் மின் நிலைய திட்டங்களுக்கு பாகிஸ்தான் ஆட்சேபம் தெரிவித்தது. ஆனால், சிந்து நதி உடன்படிக்கைக்கு உட்பட்டே நீர்மின் நிலைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று இந்தியக் குழு கூறியது.

உடன்படிக்கையை முறையாக அமல்படுத்துவது குறித்து இரு தரப்பும் முக்கிய ஆலோசனை நடத்தின. இதில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் மின் நிலையங்களை பாகிஸ்தான் நிபுணர் குழு பார்வையிட இந்திய தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல பாகிஸ்தான் பகுதி சிந்து படுகையில் இந்தியக்குழு ஆய்வு செய்ய அந்த நாட்டு அரசு அனுமதி அளித்தது.

ashraf arsha