எல்லையில் தாக்குதலை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் உடன்பாடு

டில்லி:

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் அடிக்கடி இந்திய நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில், இந்திய வீரர்களும், பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இரு நாட்டு ராணுவ செயல்பாட்டுபிரிவு இயக்குநர் ஜெனரல்கள் மத்தியில் இன்று ஹாட்லைன் மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் எல்லையில் துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைப்பிடிப்பது என்று பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்பட்டது.