Random image

இந்தியா – பாக்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நியூயார்க்கில் சந்திக்க திட்டம்

இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடுத்த வாரம் நியூயார்க்கில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ind-pak\

இம்மாதம் 26ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாக்கிஸ்தான் அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி பங்கேற்க உள்ளனர். இவர்கள் இருவரும் சந்தித்து பேசுவது உலக அரங்கில் அரசியல் எதிர்ப்பார்ப்புக்களை கொண்டுள்ளன.

இந்த சந்திப்பில் பாக்கிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தனிற்கு சரக்குகளை கொண்டு செல்ல இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்றும், அதற்கு பாக்கிஸ்தான் ஒத்துழைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனா உலகலவில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முயலுகிறது. ஆகானிஸ்தானின் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை பாக்கிஸ்தான் கொண்டு நிறுத்த அமெரிக்க முயன்று வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாக்கிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரும் சந்தித்து பேசுவது உலக நாடுகளிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் மூலம் பாக்கிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானிற்கு சரக்குகளை இந்தியா ஏற்றி செல்ல அனுமதி கோர உள்ளது. இதற்கு பாக்கிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக கடந்த மாதம் நரேந்திர மோடி பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எழுதிய கடித்ததில் பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவின் தகவல் தொடர்புகளை மீண்டும் திறக்க கோரியிருந்தார். இரு நாட்டு அமைச்சர்களின் சந்திப்பை தொடந்து செப்டம்பர் 29ம் தேதி எல்லையில் மீண்டும் 2வது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலை நடத்த மோடி திட்டமிட்டுள்ளார்.

எது எப்படி இருப்பினும் நாட்டிற்கும் இடையே சுமுகமான உறவை விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது.