டில்லி

ந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்கள் சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே போர் அபாயம் மூளலாம் என்னும் நிலை உள்ளது.   புல்வாமாவில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் தாக்குதலால் 40 சி ஆர் பி எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்   அதை தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் முகாமிட்டிருந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டு வீசி அடியோடு அழித்தது.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானப்படைகள் எல்லை தாண்டி வந்து தாக்குதல்கள் நடத்தின.   அந்த படையினரை துரத்தி சென்ற விமானப்படை விமானத்தை சுட்டு வீழ்த்தி விமானி அபிநந்தனை பாகிஸ்தானியர் சிறை பிடித்தனர்.    உலக நாடுகளின் அழுத்தத்தால் பாகிஸ்தான் அரசு அபிநந்தனை விடுதலை செய்தது.

இந்நிலையில் முன்னாள் பிரதமரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங், ”தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான மர்றும் பதற்றமான தன்மை நிலவுகிறது.   இந்நிலையில் இரு நாட்டு மக்களாகிய நாம் இரு நாடுகளின் பொருளாதார மர்றும் சமுதாய முன்னேற்றத்துக்காக் தொடர்ந்து பாடுபடவேண்டும்” என தெரிவித்துள்ளார்.