Random image

அமெரிக்காவில் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை….மத்திய அரசு

டில்லி:

அமெரிக்காவில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் தொடரும் அத்துமீறல் காரணமாக இந்தியா&பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக முடங்கியுள்ளது. இதனால், இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா – பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்கும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் போது இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேச வேண்டும் என கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் கூறுகையில், ‘‘ஐ.நா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் – பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி சந்தித்து பேச உள்ளார். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்’’என்றார்.