டெஸ்ட் கிரிக்கெட்: 405 ரன்கள் இலக்கு; 2 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து

இந்தியா – இங்கிலாந்துக்கு இடையே நடந்து வரும் டெஸ்ட் தொடர் போட்டியில் இங்கிலாந்துக்கு 405 வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

ashwin_reuters-f1விசாகபட்டிணத்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் பேட்டிங்-யை துவக்கிய இந்திய அணி 455 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து 255 ரன்கள் எடுத்து பாலோ-ஆன் ஆனது. ஆனால் இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸ்-யை துவங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸ்-ல் இந்தியா 204 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. விராட் கோலி 81, ஜெய்ன் யாதவ் 27, ரஹானே 26 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து வெற்றிபெற 405 ரன்கள் இலக்காக நிர்ணயம் ஆனது.

பின்னர் களத்தில் இறங்கிய இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. குக் 54, ஹமீது 25 ரன்களில் ஆட்டம் இழந்தனர். ரூட் 5 ரன்னுடன் களத்தில் உள்ளார். ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

இதுவரை இந்திய மண்ணில் 400 ரன்கள் சேஸ் செய்து, இந்தியாவை எந்த அணியும் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி